/* */

வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

தமிழகத்தில் கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்று வழங்கினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு கட்ட தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்றும், அதற்கான சான்று மட்டும் வழங்கினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட 128 வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என 2 ஆயிரம் பேருக்கு இன்று அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்கள் முகவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு இந்த முகாம் தொடங்கி மதியம் வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 29 April 2021 9:23 AM GMT

Related News