ஈரோடு மேம்பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- பரபரப்பு

ஈரோடு மேம்பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- பரபரப்பு
X
ஜவுளி பேனல்களை ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி, ஈரோடு சவிதா மேம்பாலத்தில் சிக்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி, ஹரியானா மாநிலத்திற்கு செல்வதற்காக, ஜவுளி பேனல்களை ஏற்றுக்கொண்டு பெருந்துறை சிப்காட் பகுதி நோக்கி கிளம்பி சென்றது.

ஈரோடு நாச்சியப்ப வீதி வழியாக வந்த அந்த லாரி, சவிதா பேருந்து நிறுத்தத்தை கடந்து மேம்பாலம் வழியாக சென்றபோது, திடீரென லாரியின் மேல் பகுதி மேம்பாலத்தில் சிக்கியது. இதனால் லாரி மேற்கொண்டு நகராமல் அங்கேயே நின்றது.

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் நாச்சியப்பா வீதி வழியாக சவிதா பேருந்து நிலையத்தில் திரும்பி செல்வது வழக்கம். திடீரென மேம்பாலத்தின் கீழ் லாரி சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து ஒருவழியாக லாரியை, அந்த சிக்கலில் இருந்து மீட்டு, பின்னர் லாரி அங்கிருந்து கிளம்பி சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil