ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு

ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு
X
ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

ஈரோடு எஸ்.பி.அலுவலகத்திற்கு, குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குறிஞ்சி சந்திரசேகரன் என்பவர், இன்று தனது நிர்வாகிகளோடு வந்து மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா என்ற பெண், சமூக வலைத்தளங்களில் எங்கள் இனத்தை குறித்து அவதூறாக பேசி வருகிறார்.
இதனால் எங்கள் இனத்தை சேர்ந்த இளைஞர்கள்,பெண்கள், என அனைவரின் மீதும் தவறான பார்வை விழுந்துள்ளது. இதனால் நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம். எனவே 'சூர்யா ரவுடி பேபி 22 , என்கிற யூடியூப் சேனலை தடை செய்து ரவுடி பேபி சூர்யா என்ற பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..