ஈரோட்டில் இன்று பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஈரோட்டில்  இன்று பி.எஸ்.என்.எல்  ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
X

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம். 

ஈரோட்டில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது.

அப்போது, பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5 ஜி சேவைகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021 ஜூன் மாத ஊதியத்தை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் கடைசி நாள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள நிலங்களை பணம் ஆக்குவதன் மூலம் பி.எஸ்.என்.எல் கடன்களைத் திருப்பிக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3-வது ஊதியம், ஓய்வூதியம் மாற்றம், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வு காலப் பயன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தப்பட்டது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். இதனால் இன்று பிஎஸ்என்எல் தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பணம் கட்டும் பணி, பிஎஸ்என்எல் லைன் பழுது சரிசெய்யும் பணி போன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!