/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 97ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில், 97,198 நபர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 97ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
X

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்குச்சாவடி அடிப்படையில் தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக தினமும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து அந்தந்த மாவட்ட சுகாதார துறையினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில், 847 மையங்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 400 பேருக்கு, இலவச தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று காலை 7 மணி முதல், நேற்றிரவ் வரை தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 18வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அதன்படி நேற்று ஒரேநாளில், ஈரோடு மாவட்டம் முழுவதும் 847 மையங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 97,198 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் 67 மையங்களில் 16,315 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Updated On: 13 Sep 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  3. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  4. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  5. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  6. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  7. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  8. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  9. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  10. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...