இரவு நேர ஊரடங்கை மீறியதாக 900 வழக்குகள் பதிவு

இரவு நேர ஊரடங்கை மீறியதாக 900 வழக்குகள் பதிவு
X
ஈரோட்டில் இதுவரை இரவு நேர ஊரடங்கை மீறியதாக 900 வழக்குகள் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கின் போது மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகள் மற்றும் 34 முக்கிய இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு முழுவதும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதில் விதிமுறைகளை மீறி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடமாடுவோர், கடையை திறந்து வைத்திருந்த உரிமையாளர்கள் என விதிகள் மீறும் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி இரவு முதல் நேற்று இரவு வரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் நேற்று இரவு மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஊரடங்கு மீறியதாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!