ஈரோடு மாநகராட்சி சார்பில் 2000 டோஸ்கள் தடுப்பூசி
ஈரோடு மாநகராட்சி பகுதியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவிந்த கூட்டம்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் முதலில் 100 மையங்களிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் போடப்பட்டு வந்தன.
இந்நிலையில் மாவட்டத்தில் 2-ம் அலை தாக்கம் காரணமாக பாதிப்பு அதிக அளவில் இருந்து வந்தது. இதையடுத்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கினர்.
இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லாததால் நேற்று மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பணிகள் நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து 10 ஆயிரத்து 200 தடுப்பூசிகள் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தது. இதனை மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 மையங்களில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று இரவு முதலே ஒரு சில மையங்களில் தடுப்பூசி போட மக்கள் குவியத் தொடங்கினர். இன்னும் சில மையங்களில் அதிகாலை 4 மணி முதலே மக்கள் குவியத் தொடங்கினர்.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று காலை 8மணி முதல் 10 மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஒவ்வொரு மையங்களிலும் 200 கோவிஷில்டுகள் பிரித்து 10 மையங்களில் 2000 தடுப்பூசிகள் போடப்பட்டன. முதலில் வந்த 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மீதம் உள்ளவர்களை போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu