/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்.டுள்ளது எனசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை  1.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவில் முதற் கட்டமாக கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் முதலில் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் போலீசார் பிற துறையில் பணியாற்றும்ஊழியர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 80 வயது மேற்பட்ட முதியவர்கள், மற்றும் 45 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகள் போட்டு வருகிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதற்கு ஏற்ப தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் ஒரு வாரத்திற்கு 4000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.தற்போது நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நேற்று வரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் 1 லட்சத்து 37ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டாவது தவணை தடுப்பூசியும் பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தேவையான அளவு கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்

Updated On: 5 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...