கொரோனா பரவல் அதிகரிப்பு : ஈரோடு மாட்டு சந்தை ரத்து

கொரோனா பரவல் அதிகரிப்பு :  ஈரோடு மாட்டு சந்தை ரத்து
X

பரபரப்பாக காணப்படும் மாட்டு சந்தை மைதானம், ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

கொரோனா பரவல் காரணமாக மாட்டு சந்தை ரத்து செய்யப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகளை வாங்கவும், விற்பனை செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வருகை புரிவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைவாக இருந்து வந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து சந்தை நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது. இதையடுத்து சந்தை வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருவதால், நடைபெற வேண்டிய சந்தை ரத்து செய்யப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!