/* */

நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம்: ஈரோட்டில் துவக்கி வைப்பு

ஈரோடு மாநகர் பகுதியில், நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தை, கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம்: ஈரோட்டில் துவக்கி வைப்பு
X

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், இன்று நடமாடும் கொரோனா பரிசோதனை வாகன தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில், 7 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களின் இயக்கத்தை, கலெக்டர் கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது மாநகர் பகுதியில் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் பரிசோதனைக்கு ஏற்படுத்த, நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் செயல்பாடுக்கு வந்துள்ளது.

மாநகர் பகுதியில் 672 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 90 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறித்து சுகாதாரத் துறையினர் பட்டியல் வெளியிட்டு வருகின்றனர். இதில் மாநகர் பகுதியில் எந்த இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த இடங்களுக்கு இந்த நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் செல்லும்.

அந்தப் பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து. சாதாரண காய்ச்சல் என்றால் அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை அளிக்கப்படும். சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். முடிவு வரும் வரை அந்த நபர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முடிவில் தொற்று ஏற்பட்டால் அந்த நபர் ஸ்கிரீனிங் சென்டருக்கு அழைத்துச் செல்லப்படுவார். அதில் முழு உடல் பரிசோதனை செய்து அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாமா அல்லது மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறலாம் என்று முடிவு செய்யப்படும்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் கார்டை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இன்று தனியார் பங்களிப்புடன் 3 வாகனங்களும், அரசு உதவியுடன் 4 வாகனங்கள் என ஏழு வாகனங்கள் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 26 April 2021 1:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?