ஈரோடு கிழக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

ஈரோடு கிழக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்தில் திடீர் மாற்றம்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்).

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை மறுநாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கடந்த மாதம் 25-ம் தேதி முதல் திமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் எம்பிக்கள். எம்எல்ஏக்கள், தலைமை கழக செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்குள்ள கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பணி நிலவரத்தை கேட்டறிந்து வருகிறார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை நாளையும், மறுநாளும் (வெள்ளி, சனி) 2 நாட்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய முதலில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இப்போது அந்த பிரசார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு ஈரோடு சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொகுதியின் மற்றும் பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து தொகுதி நிலவரங்களை கேட்டறிகிறார். பின்னர், மறுநாள் சனிக்கிழமை காலையில் வீதி வீதியாக சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!