ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ. 14.16 லட்சம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ. 14.16 லட்சம் பறிமுதல்
X

ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.14.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (கோப்பு படம்).

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.14.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதன்படி, ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்க பணம், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பரிசுப்பொருட்கள் போன்றவை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் 4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து போலீஸாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் இதுவரை 11 பேரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.14 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தப் பணம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தவிர போலீஸார் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 17 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்பிலான 25,560 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே போல் 4,800 ரூபாய் மதிப்பிலான கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்