ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; ஐந்தாம் சுற்று அதிகாரபூர்வ முடிவுகள்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; ஐந்தாம் சுற்று அதிகாரபூர்வ முடிவுகள்
X

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தற்போது ஐந்தாம் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு கடந்த மாதம் பிப்.,27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. சித்தோட்டில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் இன்று (மார்ச்.02) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.‌

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 8,429 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 2,873 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 526 வாக்குகளும், தேமுதிக 112 வாக்குகளும் பெற்றுள்ளனர். முதல் சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளரை விட சுயேட்சை வேட்பாளர் முத்துபாவா 178 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

தொடர்ந்து, இரண்டாம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 16,286 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 5,487 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் முத்துபாவா 261 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 220 வாக்குகளும் பெற்றிருந்தார்.

மூன்றாம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 23,905 வாக்குகளும் , அதிமுக வேட்பாளர் தென்னரசு 8,274 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 1,997 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 336 வாக்குகளும் பெற்றிருந்தார்.

நான்காம் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் 31,884 வாக்குகளும், அதிமுக 10,747 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 2,664 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 431 வாக்குகளும் பெற்றிருந்தார். இந்நிலையில், தற்போது, ஐந்தாம் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் சுற்று முடிவு முன்னணி நிலவரம்:

காங்கிரஸ் - 39,648

அதிமுக - 13,643

நாம் தமிழர் கட்சி - 3,354

தேமுதிக - 517

சுயேட்சை வேட்பாளர் முத்துபாவா - 290

சுயேட்சை வேட்பாளர் தனலட்சுமி - 160

நோட்டா - 194

தற்போது, ஐந்தாம் சுற்று முடிவில் 58,757 வாக்குகள் பதிவாகி இருந்தன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!