ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பார்வையாளர்கள் தொலைபேசி எண்கள் வெளியீடு
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர், தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் காவல்துறை பார்வையாளர் வருகை தொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் காவல்துறை பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான புகார்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் 7094488456, தேர்தல் செலவின பார்வையாளர் கௌதம்குமார் 7094488636, காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் சந்தேவ் 7094488543 ஆகியோருக்கு அலைபேசியின் வாயிலாக புகார் அளிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி குறிப்பிட்டுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu