ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் ஜெயக்குமார் புகார் மனு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாள் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். வழக்கறிஞர் பாபு முருகவேல் உடன் இருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பணத்தை தண்ணீர்போல் ஆளுங்கட்சியினர் செலவழிக்கின்றனர்.
வாக்காளர்களை இன்ப சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஆட்டக்களத்திலேயே இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu