ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பகல் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பகல் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குப்பதிவு
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி குடும்பத்தினருடன் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பகல் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குகள் பதிவாகியுள்ளது

ஈரோடு கிழக்குத் தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குப்பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் முதல் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பகல் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதமும், காலை 11 மணி நிலவரப்படி 27.89 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.

அதனைத்தொடர்ந்து, பகல் 1 மணி நிலவரப்படி 44.56% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் 49,740 பேரும், 51,649 வாக்களார்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் வாக்களித்து உள்ளனர். ஈரோடு தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் கடந்த 6 மணி நேரத்தில் 1,01,392 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் அதிமுக புகார். வாக்குச்சாவடி எண் 138 மற்றும் 139 ஆகிய இடங்களில் குறிப்பிட்ட கட்சியினர் பணம் வழங்குவதாக மின்னஞ்சல் மூலம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

இதேபோல், ஈரோடு பிரப்ரோடு வாக்குப்பதிவு மையத்தில் ஒரு வாக்குச் சாவடியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு செலுத்தினால் கை சின்னத்தில் லைட் எரிவதாக அதிமுகவினர் புகார் மனு அளித்து உள்ளனர். அதிமுகவினர் புகாரை தொடர்ந்து 178-வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மேலும், கருங்கல்பாளையம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி பகுதியில் வாக்காளர்கள் வாக்களிக்க பல மணி நேரம் காத்திருந்த வாக்காளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!