ஈரோடு மாவட்ட இன்றைய கிரைம் செய்திகள்..

ஈரோடு மாவட்ட இன்றைய கிரைம் செய்திகள்..
X

அந்தியூர் அருகே மிட்டாய் கடையில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட காளிராஜ்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை, குட்கா மற்றும் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது உள்ளிட்ட கிரைம் செய்திகளின் தொகுப்பை இங்கு காண்போம்.

மிட்டாய் கடையில் குட்கா விற்றவர் கைது:-

அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி வடக்கு தெருவில் உள்ள மிட்டாய் கடையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள கடையில் சோதனை நடத்தினர். சோதனையில் ரூ.1,110 மதிப்புள்ள குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையின் உரிமையாளரான விருதுநகர் மாவட்டம் ஈ-ரெட்டிபட்டி வடக்கு தெருவை சேர்ந்த காளிராஜ் (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

6 கிலோ குட்கா , புகையிலை பொருட்கள் பறிமுதல்:-

சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு பேட்டை சந்தனகிடங்குரோடு அண்ணாநகர் சந்திப்பில் சந்தேகப்படும் வகையில் இருவர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் இருவரிடமும் நடத்திய அவர்கள் இருவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தில் சாக்கு பையில் 6 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குட்கா பொருட்களை விற்க முயன்ற ஈரோடு மொசிகீரனார் தெருவை சேர்ந்த ராஜேஷ் ராவல் (31), சத்தி வடக்கு பேட்டை மேற்கு தெருவை சேர்ந்த கந்தவேல் (49) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

வயிற்று வலியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை :-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் எடுத்தனூரை சேர்ந்தவர் முனியன் (49). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மகன் பிரவீன் (17). இருவரும் சேர்ந்து ஊர்ஊராக சென்று தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 3 வருடங்களாக பிரவீனுக்கு வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 19-ம் தேதி வயிற்று வலி அதிகமாகவே பிரவீன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தாக தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷம் குடித்து வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :-

பவானி அருகே உள்ள குப்பிச்சிபாளையம் அயமரத்து தோட்டத்தை சேர்ந்தவர் செல்வன் மகன் கார்த்திக் (29). இவரது மனைவி மோகனபிரியா. கார்த்திக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மோகனபிரியா கோபித்துக் கொண்டு தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வருத்தத்தில் இருந்த கார்த்திக் கடந்த மாதம் 20-ம் தேதி மதுபோதையில் குளிர்பானத்தில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

பெட்டி கடையில் மது விற்றவர் கைது‌:-

பவானி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பவானி மேற்கு தெருவில் உள்ள பெட்டி கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் 4 மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் கடையின் உரிமையாளரான வேலுச்சாமி (52) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

148 மது பாட்டில்கள் பறிமுதல்:-

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே அரசு சார்பில் டாஸ் மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடை அருகில் சத்தியமங்க லம்போலீசார்ரோந்து சென்றனர். அப்போது அந்தபகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம் குருந்தங்குடியை சேர்ந்த சுரேஷ் (வயது 37) என்ப தும், அவர் அதிக போதைக்காக ரசாயன பொடி கலந்த 148 மதுபாட்டில்களை வைத்திருந்ததும்,' தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சுரேசை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 148 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மது விற்றவர் கைது‌:-

கொடுமுடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் மணப்பாறை பங்குராணிபட்டியை சேர்ந்த வடிவேல் (37) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மது விற்ற பெண் கைது :-

புளியம்பட்டி - காவிலிபாளையம் சாலையில் உள்ள தில்லைநகரில் புளியம்பட்டி போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதனையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து நடத்திய விசாரணையில் காவலிபாளையம் அம்மன்கோவில்தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மனைவி சம்பூரணம் (39) , என்பதும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து சம்பூரணம் முட்புதரில் மறைத்து வைத்து விற்பனை செய்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் ‌.

Tags

Next Story