ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்…

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்…
X
ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஈரோடு மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்:

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது:

ஈரோடு சூரம்பட்டிவலசு பாரதிபுரம் மதுரை வீரன் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சீட்டாடுவதாக ஈரோடு தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு விரைந்து சென்று சீட்டாடிய நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர்.

விசரணையில், அவர்கள் பட்டிநேதாஜி வீதியை சேர்ந்த கார்த்திக் (34), சூரம்பட்டிவலசை சேர்ந்த தங்கராஜ் (50), குமார் (38), மூர்த்தி என்ற வெங்கடாச்சலம் (42), வீரப்பன்(52) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சீட்டாட பயன்படுத்திய 450 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் காரிய காளியம்மன் கோயில் அருகே பணம் வைத்து சீட்டாடம் நடத்தியவர்களை சத்தியமங்கலம் போலீஸார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அதில், செண்பகபுதூரை சேர்ந்த முத்துசாமி (73) என்பவரை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து முத்துசாமியை கைது செய்து, தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற 7 இருசக்கர வாகனங்கள், 9 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

லாட்டரி விற்ற 2 பேர் கைது:

ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக டவுன் போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த சேலம் மாவட்டம் வாழசய்யூரை சேர்ந்த பழனிவேல் என்ற செந்தில் (47) என்பவரை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்போல், பவானி மார்க்கெட் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பவானி முத்தாலவீதியை சேர்ந்த ஞானவேல் (42) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

வாய்க்காலில் முதியவர் சடலம்:

ஈரோடு அடுத்த கங்காபுரம் ஜீவாநகர் கீழ் பவானி வாய்க்காலில் நேற்று ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் பூர்ணிமா வெள்ளோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சடலமாக கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும் என்பது தெரிய வந்தது. இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story