ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
X

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார் பொறுப்பேற்றார்.

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார் செவ்வாய்க்கிழமை (நேற்று) பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார் செவ்வாய்க்கிழமை (நேற்று) பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக (டிஆர்ஓ) பணியாற்றிய சந்தோஷினி சந்திரா, பேறுகால விடுப்பில் சென்றார். இதையடுத்து, பவானிசாகர் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையத்தின் முதல்வர் லதா மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், சென்னையில் டிஆர்ஓ மற்றும் மின்னாளுமை திட்டத்தின் இணை இயக்குநராக பணியாற்றிய சாந்தகுமார், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, சாந்தகுமார் (டிச.26) நேற்று ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப் பேற்று கொண்டார்.

மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட சாந்தகுமாருக்கு அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தகவலுக்காக:- மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் பணியாகும். இவர் வருவாய்த்துறையின் அனைத்துச் செயல்பாடுகளையும் கவனிக்கிறார். மாவட்ட ஆட்சியர் விடுமுறையில் இருக்கும் போதும், மாவட்ட ஆட்சியர் பதவியில் யாரும் நியமிக்கப் படாத நிலையிலும், இவர் மாவட்ட ஆட்சியர் பணியைக் கூடுதலாகக் கவனிப்பார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!