ஈரோடு மாவட்டத்தில் இரவு முழுவதும் பலத்த மழை; 460.80 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் இரவு முழுவதும் பலத்த மழை; 460.80 மி.மீ மழை பதிவு
X

மழை (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் மாநகர், புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் மாநகர், புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நேற்று) மாலை முதல் புதன்கிழமை (இன்று) அதிகாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தினமும் மாலை நேரத்தில் தொடங்கும் இந்த மழை இடைவிடாமல் இரவு வரை அடைமழையாக பெய்கிறது. இதன் காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாநகர்ப் பகுதிகளைவிட ஊரகப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. மழை காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரதான சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. மேலும், மழையின் காரணமாக 3 குடிசை வீடுகள் பாதி சேதமடைந்த நிலையிலும், 1 குடிசை வீடு முழுவதும் சேதமடைந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.7) நேற்று காலை 8 மணி முதல் புதன்கிழமை (நவ.8) இன்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 9.00 மி.மீ ,

மொடக்குறிச்சி - 6.20 மி.மீ ,

கொடுமுடி - 18.00 மி.மீ ,

பெருந்துறை - 36.00 மி.மீ ,

சென்னிமலை - 4.00 மி.மீ ,

பவானி - 19.20 மி.மீ ,

கவுந்தப்பாடி - 15.00 மி.மீ ,

அம்மாபேட்டை - 60.40 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 58.40 மி.மீ ,

கோபிசெட்டிபாளையம் - 52.20 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 20.60 மி.மீ ,

கொடிவேரி - 71.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 24.60 மி.மீ ,

நம்பியூர் - 6.00 மி.மீ ,

சத்தியமங்கலம் - 18.00 மி.மீ ,

பவானிசாகர் - 42.20 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 460.80 மி.மீ ஆகவும், சராசரியாக 27.11 மி.மீ ஆகவும் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil