ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 423 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 423 மி.மீ மழை பதிவு
X

நேற்று பெய்த மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீரானது எண்ணமங்கலம் ஏரி மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்வதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரேநாளில் 423 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 68.80 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் ஒரேநாளில் 423 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 68.80 மி.மீ மழை பதிவானது.

தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் அணை, ஏரி மற்றும் குளங்களுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (12ம் தேதி) சனிக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தமாக 423 மி.மீ மழையும், சராசரியாக 24.88 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 68.80 மீ.மீ மழையும், குறைந்தபட்சமாக பெருந்துறை, சென்னிமலை மற்றும் நம்பியூரில் 5 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாநகரில் 77 மி.மீ, மொடக்குறிச்சி 37 மி.மீ, கொடுமுடி 6 மி.மீ, பெருந்துறை 5 மி.மீ, சென்னிமலை 5 மி.மீ, பவானி 38 மி.மீ, கவுந்தப்பாடி 10 மி.மீ, அம்மாபேட்டை 58.40 மி.மீ, வரட்டுப்பள்ளம் அணை 68.80 மி.மீ, கோபிசெட்டிபாளையம் 14.20 மி.மீ, எலந்தகுட்டைமேடு 8.20 மி.மீ, கொடிவேரி அணை 15 மி.மீ, குண்டேரிப்பள்ளம் அணை 25.20 மி.மீ, நம்பியூர் 5 மி.மீ, சத்தியமங்கலம் 16 மி.மீ, பவானிசாகர் அணை 7.80 மி.மீ, தாளவாடி 26.40 மி.மீ மழை பதிவானது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil