ஈரோடு மாவட்டத்தில் 161 மில்லி மீட்டர் மழை பதிவு
அந்தியூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தன. உள்படம்: தென்னை மரம் மின் கம்பி மீது சாய்ந்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் வாட்டி வருகிறது. நாள்தோறும் 100 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் கடும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில் அவ்வப்போது இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரவு நேரங்களில் குளுமையான நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து, மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு நள்ளிரவு வரை மாவட்டம் முழுவதும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. அந்தியூர் புதுக்காடு பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தென்னை மரம் மின் கம்பி மீது சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பின்னர், மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) காலை முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 9.0 மி.மீ ,
கோபி - 13.2 மி.மீ ,
பவானி - 8.0 மி.மீ ,
சத்தி - 23.0 மி.மீ ,
நம்பியூர் - 18.0 மி.மீ ,
மொடக்குறிச்சி - 3.0 மி.மீ ,
கவுந்தப்பாடி - 1.0 மி.மீ ,
எலந்தகுட்டைமேடு - 5.0 மி.மீ ,
பவானிசாகர் - 7.6 மி.மீ ,
வரட்டுப்பள்ளம் - 37.0 மி.மீ ,
கொடிவேரி அணை - 15.0 மி.மீ ,
குண்டேரிப்பள்ளம் - 19.2 மி.மீ ,
அம்மாபேட்டை - 2.0 மி.மீ ,
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 161.0 மி.மீ ஆகவும், சராசரி மழைப்பொழிவு 9.4 மி.மீ ஆகவும் பதிவாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu