ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 126.90 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 126.90 மி.மீ மழை பதிவு
X

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று மாலை வானம் இருண்டு கருமேகங்களோடு காட்சியளித்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 126.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 126.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஈரோடு மாவட்டத்தில் மழை வருவது போல் இருந்தாலும் மேகங்கள் திரண்டு, பின்னர் மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது.

இந்த நிலையில், நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வானில் கருமேகக் கூட்டங்கள் கூடியது. பின்னர் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இம்மழையால், பவானி , சித்தோடு, அந்தியூர், கோபி, சத்தி, கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மாவட்டத்தில் நேற்று (31ம் தேதி) காலை 8 மணி முதல் இன்று (1ம் தேதி) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

சென்னிமலை - 1.40 மி.மீ,

பவானி - 18.80 மி.மீ,

கவுந்தப்பாடி - 19.40 மி.மீ,

வரட்டுப்பள்ளம் அணை - 7.60 மி.மீ,

கோபிசெட்டிபாளையம் - 9.20 மி.மீ,

எலந்தகுட்டைமேடு - 6.20 மி.மீ,

கொடிவேரி அணை - 13.00 மி.மீ,

குண்டேரிப்பள்ளம் அணை - 33.60 மி.மீ,

சத்தியமங்கலம் - 7.00 மி.மீ,

பவானிசாகர் அணை - 8.20 மி.மீ,

தாளவாடி - 2.50 மி.மீ,

மாவட்டத்தில் மொத்தமாக 126.90 மி.மீ ஆகவும், சராசரியாக 7.94 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil