ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஏப்.,25) 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஏப்.,25) 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு
X

வெயில் பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களும் கோடை காலமாகும். கோடை காலத்தில் வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பிருந்தே பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில், நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் மேலாகவே வெயில் பதிவாகி வருகிறது. பகல் நேரத்தில் சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வீடுகளில் இருப்பவர்கள் மின்தடை ஏற்படும் நேரங்களில் கடும் புழுக்கத்தால் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று ஏப்ரல்.25 (செவ்வாய்க்கிழமை) அதிகபட்சமாக 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், குறைந்த பட்சமாக 73.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. .

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி