ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய மழை; 589.10 மி.மீ பதிவு

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய மழை; 589.10 மி.மீ பதிவு
X

மழை (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 152.20 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 152.20 மி.மீ மழை பதிவானது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை இன்று காலை வரை விடிய விடிய நீடித்தது.

மாவட்டத்தில் நேற்று (நவ.22) புதன்கிழமை காலை 8 மணி முதல் இன்று (நவ.23) வியாழக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 7.40 மி.மீ ,

மொடக்குறிச்சி - 6.20 மி.மீ ,

கொடுமுடி - 20.00 மி.மீ ,

சென்னிமலை - 1.00 மி.மீ ,

பவானி - 40.00 மி.மீ ,

கவுந்தப்பாடி - 152.20 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் -7.80 மி.மீ ,

கோபி - 80.40 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 101.20 மி.மீ ,

கொடிவேரி - 62.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 6.40 மி.மீ ,

நம்பியூர் - 28.00 மி.மீ ,

சத்தியமங்கலம் - 34.00 மி.மீ ,

பவானிசாகர் - 40.00 மி.மீ ,

தாளவாடி - 2.50 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 589.10 மி.மீ ஆகவும், சராசரியாக 34.65 மி.மீ ஆகவும் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings