ஈரோடு மாவட்ட காவல் துறையில் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தாத பேட்டரிகள் 15ல் ஏலம்
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்.
ஈரோடு மாவட்ட காவல் துறையில் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்படாத பேட்டரிகள் மற்றும் உபகரணங்களின் பொது ஏலம் வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்ட காவல் தொலைத்தொடர்பு பிரிவு மற்றும் சென்னிமலை ரிப்பீட்டர் நிலையத்தில் பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த விஎச்எப் உபகரணங்களின் பேட்டரிகள் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வருகிற 15ம் தேதி (வெள்ளி) காலை 11 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்பவர்கள் வருகிற 8ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட காவல் தொலைத்தொடர்பு பிரிவில் ரூ.500 டெபாசிட் செலுத்தி, ஏலம் எடுப்பவர்கள் பேட்டரிகளை அனுமதிப்பதற்கான மத்திய, மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ்களின் (காற்று,நீர்) அசல் மற்றும் நகலை சமர்பித்து ஒப்படைக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்த்த பின்னரே தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். திறந்த ஏல முறை பின்பற்றப்படும்.
தகுதியானவர்கள் தங்களது நிறுவனங்களின் அங்கீகார கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதிக ஏலம் எடுத்தவர் ஏலம் முடிந்த உடனேயே மொத்த ஏல தொகை உடன் ஜிஎஸ்டி 18 சதவீதம் செலுத்த வேண்டும். ஏலதாரர் பணத்தை செலுத்திய உடன் உடனடியாக ஏலம் எடுத்த பொருட்கள் ஒப்படைக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவினை 94454 66184, 94454 66185 என்ற தொலைபேசி எண்க ளில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu