ஈரோடு மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் எம்பிஎன்எம்ஜெ கல்லூரி மாணவிகள் சாதனை..!
தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற எம்பிஎன்எம்ஜெ பொறியியல் மாணவிகளை கல்லூரி தாளாளர் டாக்டர்.வசந்தா சுத்தானந்தன் பாராட்டிய போது எடுத்த படம்.
ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் சென்னிமலை எம்பிஎன்எம்ஜெ பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்.
ஈரோடு மாவட்ட தடகள சங்கம் நடத்திய 22வது மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டி, வ.ஊ.சி. பூங்கா மைதானத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை 2 நாட்கள் நடந்தது.
இப்போட்டிகளில் சென்னிமலை, எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு கணினி அறிவியல் துறையில் பயிலும் மாணவி ஆ.குணரஞ்சனி 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 1000 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதேபோல், முதலாமாண்டு கணினி அறிவியல் துறையில் பயிலும் மாணவி ஆர். நந்தினி 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 1000 கி.மீ. பிரிவில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளை கல்லூரியின் தாளாளர் பாரத் வித்யா சிரோமணி டாக்டர். வசந்தா சுத்தானந்தன், கல்லூரியின் ஆலோசகர் எம்.வி. தெய்வசிகாமணி, கல்லூரி முதல்வர் எம்.ரமேஷ், உடற்கல்வி இயக்குனர் ஜெ.ஜஸ்டின் புருஸ் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்திப் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu