ஈரோடு மாவட்டத்தினர் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தினர் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்

மத்திய அரசின் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள், மத்திய அரசின் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணிகள், அறிவியல் மற்றும் பொறியியல், பொது சேவை, சிவில் சேவைகள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்த மற்றும் வித்தியாசமான சாதனைகள், சேவை புரிந்தவர்களுக்கு 2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த சிறந்த மற்றும் வித்தியாசமான சாதனை புரிந்தவர்கள் ராஷ்ட்ரிய புரஸ்கார் இணைய முகப்பு http://awards.gov.in இணையதள முகவரியில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்யாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. பதிவு செய்த விண்ணப்பங்களை தேர்வுக்குழு கூட்டம் மூலம் பரிசீலனை செய்து இவ்விருது வழங்குவதற்குரிய தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் http://awards.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது விவரங்களை இவ்விணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30ம் தேதி மாலை 5 மணி ஆகும்.

இவ்விருது தொடர்பாக தேவைப்படும் விவரங்களை, ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகம் 6வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். மேலும், 0424-2261405 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story