ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
X

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட இராஜாஜிபுரம், சத்தி வீதி, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள பதற்றமான வாக்குசாவடியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணைத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 2025 அறிவிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சட்டமன்ற தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 9 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.


இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நுண்பார்வையளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நாளன்று நேரலையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி, ராஜாஜிபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வளையகாரவீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ரஹார வீதியில் உள்ள மஹாஜன உயர்நிலைப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வுகளின்போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உட்பட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!