ஈரோடு மாவட்ட திமுக மகளிர் அணியினர் போலீஸ் எஸ்பி.,யிடம் புகார்
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்த திமுக மகளிர் அணியினர்.
ஈரோடு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர்கள் திலகவதி, பாண்டியம்மாள் மற்றும் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி நடராஜன் ஆகியோர் தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் புதன்கிழமை (நேற்று) புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், கடந்த 20ம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் ஆபாசமாகவும், அவதூறாகவும், அநாகரிகமான முறையில் பேசியும், பாட்டுப்பாடியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதேபோல் கனிமொழி எம்பியை பெண் என்று கூட பாராமல் அவரை அவமானப்படுத்தும் விதமாக அவரை பற்றி பேசியும், பாடல் பாடி உள்ளனர்.
இந்த செயல் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஈரோடு மாவட்ட மகளிர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் மதுரை மாநாடு நிகழ்ச்சியை நடத்திய அதிமுக நிர்வாகிகள் மீதும், கனிமொழி எம்பியை தரக்குறைவாக விமர்சித்து பாடியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu