/* */

லாட்டரி சீட்டு விற்றவர் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

லாட்டரி சீட்டு விற்றவர் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட கிரைம் செய்திகள்
X

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த சத்தியமங்கலம் போலீசார்.

ஈரோடு மாவட்ட எல்லையான பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம், குண்டல் பேட்டிலிருந்து வந்த கேரள மாநில சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில், வாகன ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது 52 சிறிய வெள்ளை சாக்கு மூட்டைகளில் 960 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலம், பாலக்காடு தாசரக் பகுதியை சேர்ந்த சஜீர் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட ரூ.7. லட்சத்து 3 ஆயிரத்து 440 மதிப்பிலான புகையிலை பொருட்கள். ரூ.7.300 மற்றும் கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்ற இருவர் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரச்சலூர் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ராசாம்பாளையம் பகுதியில் 2 பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் போலீசை கண்ட தும் தப்பி ஓடினர். தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த அஜீத் (22), ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலா (29) என்பதும் அவர்கள் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதனையடுத்து ராசாம்பாளையத்தில் உள்ள பாலாவின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அஜீத், பாலா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு நம்பியூரை அடுத்துள்ள காளியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவருடைய மகள் லாவண்யா (வயது17) தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், மகன் மதியரசு கோபியில் உள்ள கல்லூரியிலும் படித்து வந்தனர். கடந்த 2 மாதங்களாக லாவண்யா கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல நேற்று காலை மதியரசு கல்லூரிக்கு சென்று விட்டார். தாய் செல்வியும் வேலைக்கு சென்று விட்டார். கல்லூரி முடிந்து மதியரசு வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் அறையில் லாவண்யா தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில், நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

கொடுமுடி அருகே உள்ள ஏமகண்டனூரை சேர்ந்தவர் கல்யாணி (வயது52). இவரது தங்கை ராணி (46), திருமணமாகவில்லை. இவர்களது பெற்றோர் இறந்துவிட்டனர். கல்யாணி கணவர் உயிரிழந்து விட்டார்.இதனால், கல்யாணியின் மகன் மணிகண்டன், சகோதரிகள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந் தனர். ராணிக்கு தோல்நோய் பாதிப்பு இருந்ததால். அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால், அவர் உடல் நிலை குறித்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த ராணி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்த தகவலின் பேரில், கொடுமுடி போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

3 பேர் கைது

கோபி காவல் எல்லைக்குட்பட்ட சத்தியமங்கலம் மலையடிப்புதூரில் உள்ள பள்ளிக்கு பின்புறம் ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அப்பகுதியில் நேற்று சோதனை செய்தனர். இதில், சத்தியமங்கலம் தலமலை கஸ்பா பகுதியை சேர்ந்த சின்னராசு (24), கே.என்.பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (29), குருமந்தூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (25) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை மடக்கி பிடித்த கோபி போலீசார். 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 650 கிராம் கஞ்சா, 3 பைக்கை போலீசார் பறி முதல் செய்தனர்.

லாட்டரி விற்ற 3 பேர் கைது

கோபி சாரதா மாரியம்மன் கோயில் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுப்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி (54), பச்சைமலை அடி வாரத்தை சேர்ந்த ரத்தினசபாபதி (56) ஆகிய இருவரும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதேபோல, ஈரோடு அறச்சலூர் அடுத்த தலவுமலை 4 ரோடு பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த அட்டவணை அனுமன்பள்ளி பகுதியை சேர்ந்த லோக நாதன் (26) என்பவரை அறச்சலூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Updated On: 4 Nov 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  6. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  7. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  8. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  10. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!