வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது:
சிவகிரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சிவகிரி அருகே கொள்ளாங்கோவில் கிளுவன்காடு வள்ளியம்பாளையம் மடத்து தெருவை சேர்ந்த நடராஜன் (64) என்பவரது வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதும், அவர் கஞ்சா செடியை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடராஜனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சாவையும், 5 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.
சீட்டாட்டம் ஆடிய 4 பேர் கைது:
தாளவாடி அருகே கரளவாடி - மெட்டல்வாடி ரோட்டில் சீட்டு சூதாட்டம் நடைபெறுவதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவபாதா (30), சுப்பிரமணி (50), மகேஷ் (50), மற்றொரு மகேஷ் பிடித்து அவர்களிடம் இருந்து பணம் ரூ 11,620ஐ பறிமுதல் செய்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய குருசாமி, சுப்பண்ண, மற்றும் மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
3வது முறையாக தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழப்பு:
ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் மாயபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன சுந்தரம் (38), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மோகனசுந்தரத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகனசுந்தரத்தை விட்டு மனைவி மகனுடன் பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையில் மோகனசுந்தரம் 2 முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அவரை, குடும்பத்தினர் காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில், மோகனசுந்தரம் பெருமாள் மலை மண்கரட்டில் 3வது முறையாக கடந்த 4ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனசுந்தரம் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu