ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...
X

க்ரைம் செய்திகள் (பைல் படம்).

மொடக்குறிச்சி அருகே மருந்துக்கடை உரிமையாளர் தற்கொலை உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகளின் தொகுப்பை இங்கு காண்போம்.

மருந்துக்கடை உரிமையாளர் தற்கொலை:

மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் கோட்டை மேட்டுபுதூரை சேர்ந்தவர் மூர்த்தி(50). இவர் மருந்து கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 5 ஆண்டுக்கு முன் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் பாதிப்பு சரியாகாமல் இருந்து வந்ததால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் மூர்த்தி இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மூர்த்தி விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து குடும்பத்தினர் மீட்டு அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது:

ஈரோடு, பழையபூந்துறை ரோடு கால்நடை மருத்துவமனை அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்த மதர்ஷா என்பவரது மகன் ஜாவித்(19) என்ப வரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தறித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை:

ஈரோடு வள்ளியம்மை வீதியை சேர்ந்தவர் நரேந்திரன் என்ற மணிகண்டன்(26) தறித்தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா(19) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் மணிகண்டன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.இதனால் கணவன் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாமக் ல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சுகன்யா சென்றுவிட்டார். தனியாக வீட்டில் இருந்த கணவர் மணிகண்டன் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story