ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...
X

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் (பைல் படம்).

அந்தியூர் அருகே மகனுக்கு நீச்சல் கற்றுகொடுத்த தந்தை கிணற்றில் மூழ்கி பலி உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகளின் தொகுப்பை இங்கு காண்போம்.

மகனுக்கு நீச்சல் கற்றுகொடுத்த தந்தை கிணற்றில் மூழ்கி பலி :-

அந்தியூர் அடுத்துள்ள பிரம்மதேசம் குழியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (36). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி (33). இவர், அங்கன்வாடியில் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு ஹரிஹரன் (12) என்ற மகன் உள்ளார். நேற்று மதியம் சேகர் தனது மகனுக்கு அங்குள்ள விவசாய கிணறு ஒன்றில் நீச்சல் கற்றுக்கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கிணற்றில் மேல்பகுதியில் நின்றிருந்தபோது கால் தவறி சேகர் கிணற்றில் விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய சேகர் சில நிமிடங்கள் ஆகியும் மேலே வர இதனால் பதறியடித்த மனைவி ஆனந்தி மற்றும் மகன் ஹரிஹரன் ஆகியோர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து முயற்சித்தும் சேகரை மீட்க முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து சேகரை சடலமாக மீட்டனர். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் விசாரிக்கின்றனர்.

குடிபோதையில் தொழிலாளி கிணற்றில் விழுந்து பலி:-

ஈரோடு அடுத்துள்ள பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (52). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மாலை அங்குள்ள மோகன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்து கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். பின்னர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த வர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி முருகனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த ஆணின் உடல்:-

மொடக்குறிச்சி அடுத்த சதம்பூர் கிராமத்தில் காலிங்கராயன் வாய்க்காலில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதந்து வருவதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த உடலை மீட்டனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!