ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 26ம் தேதி வீராங்கனைகள் தேர்வு

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு  26ம் தேதி வீராங்கனைகள் தேர்வு
X

கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 26ம் தேதி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 26ம் தேதி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சுரேந்திரன் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு ஈரோடு திண்டல் சக்திநகர் எஸ்.எஸ். கிரிக்கெட் பயிற்சி கூடத்தில் வருகிற 26ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.

2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ம் தேதிக்கு முன்பு பிறந்த மகளிர் பங்கேற்கலாம். அசல் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். கிரிக்கெட் சீருடை, ஷூ அணிந்து கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!