ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...
பைல் படம்.
கேரளா மாநில லாட்டரி விற்றவர் கைது:-
பவானி புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (50). இவரிடம் பவானி, கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த குமார் (36) என்பவர் வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, கேரள மாநில லாட்டரிச் சீட்டு என கூறி செல்வராஜிடம் பல முறை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து, செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 4- ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக மது விற்ற 8 பேர் கைது:-
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அம்மாபேட்டை, கோபி, கவுந்தப்பாடி, கடத்தூர், தாளவாடி, கடம்பூர், பெருந்துறை போலீசார், தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு | மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 67 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை:-
கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவக்காளி பாளையம், பூசாரிவலசு பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா (60). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரேமா வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் இடது பக்க இருப்பில் பலத்த அடிபட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மாவு கட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். எனினும் வலி பொறுக்க முடியாமல் பிரேமா அடிக்கடி செத்துப் போய் விடுவதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வலி தாங்க முடியாமல் வீட்டி லிருந்த சாணிபவுடரை (விஷம்) குடித்து வாந்தி எடுத்தார். அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu