ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் வேட்பு மனு தாக்கல்
ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.இ.பிரகாஷ் திங்கட்கிழமை (இன்று) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி(புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து பவுர்ணமி நாளில் மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, துணை செயலாளர்கள் சூர்யா ஆ.செந்தில்குமார், சின்னையன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் சிவகிரி, காகம் அருகில் உள்ள கணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 1976 ஆம் ஆண்டு பிறந்த கே.ஈ. பிரகாஷ், இந்து கொங்கு வேளாளர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளார். இவருக்கு பி.கோகிலா என்ற மனைவியும், பி.சுகன்யா என்ற மகளும், பி.இனியன் என்ற மகனும் உள்ளனர்.
இவரது தந்தை கே.எஸ்.ஈஸ்வரமூர்த்தி, 1977ம் ஆண்டு முதல் திமுக கழக கிளை செயலாளராக இருந்து வருகிறார். இவர் 19 வயதிலேயே திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 1990 முதல் திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளராகவும், தற்போது திமுக மாநில இளைஞரணி துணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
திமுகவில் 2005ம் ஆண்டு சேர்ந்த கே.இ.பிரகாஷ், 2011ம் ஆண்டு திமுக மொடக்குறிச்சி 18 வந்து வார்டு ஒன்றிய குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் திமுக சார்பில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவருக்கு திமுக கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu