மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர் சரிபார்க்கும் பணி ஈரோடு ஆட்சியர் ஆய்வு

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர் சரிபார்க்கும் பணி ஈரோடு ஆட்சியர் ஆய்வு
X

கருமாண்டிசெல்லிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலரால் ஆய்வு செய்யப்பட்ட, பதிவேற்றம் செய்யப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களின் மீது ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மேலாய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் பதிவு சரிபார்க்கும் பணியினை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ‌‌.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் பதிவு சரிபார்க்கும் பணியினை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின்கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 15ம் தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இந்த திட்டத்திற்கான குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.இந்த முகாம்கள் மூலமாக இதுவரை சுமார் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து ரேஷன் அடைதாரர்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களின் உண்மை தன்மை குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சரிபார்த்து வருகின்றனர். விண்ணப்பதாரர் வசிக்கும் வீடு சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்றும், என்ன வேலை பார்க்கிறார்கள், என்ன வாகனம் வைத்திருக்கிறார்கள் மற்றும் வருமானம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்து சரிபார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவிற்கு உட்பட்ட கருமாண்டிசெல்லிபாளையம், சீனாபுரம் ஆயிக்கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கும் பணியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் செவ்வாய்க்கிழமை (இன்று) சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
அடுத்த புது மொபைல் வந்துருச்சு இத பாருங்க !!ரியல்மி 14X மொபைல் வரப்போகுது!