/* */

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து அலுவலர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து அலுவலர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆலோசனை
X

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழையையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை 2023 - முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:- வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை இன்னல்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முன்னேற்பாடு கூட்டம் நடைபெறுகிறது. வடகிழக்குப் பருவமழை - 2023 காலத்தில் ஏற்படும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை இன்னல்களை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு வட்டார அளவில் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மீட்பு குழு, நிவாரண முகாம் மேலாண்மைக் குழு சிறப்பு குழு அமைத்து பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள், வடிகால்கள், கால்வாய்கள் ஆகியவற்றில் தூர்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, காவல் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாதிரி பயிற்சிகளை நடத்துதல் வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இயற்கை பேரிடர் காலங்களில் செயல்படுவதற்காக மருத்துவமனை பாதுகாப்பு செயல்திட்டம் அமைக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்குதல் மற்றும் மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்துதல் வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலைபேசி எண்: 1077, 0424-2260211-ல் தெரிவிக்க வேண்டும். வருவாய் கோட்டம் மற்றும் வட்ட அலுவலகங்களில் 24×7 இயங்குமாறு கட்டுப்பாட்டு அறை அமைத்து அலுவலர்களுக்கு முறைப் பணி வழங்க வேண்டும். மழை அளவு மற்றும் சேத விபரங்களை ஒவ்வொரு நாளும் காலை 07.00 மணிக்குள் 1077 என்ற எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும். மேலும், மழைமானி நிலையங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் தணிக்கை செய்து மழைமானிகள் நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். WHF/HF செட்டுகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள் மற்றும் பேரிடர் கால காவலர்கள் / முதல் நிலை மீட்பாளர்கள் தங்களது பகுதியில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் கூறித்து தகவல்களை தெரிவிக்க ஏதுவாக வட்டாட்சியரின் தொடர்பு எண்களை அவர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும்.

தேவையான அடிப்படை வசதிகளுடன் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். நிவாரண முகாம்களில் தேவைக்கேற்றபடி கழிவறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மின்சாரத் தடை ஏற்படாத வண்ணம் ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும். நிவாரண முகாம்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனியாக அறை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். ஒவ்வொரு நிவாரண முகாமிலும் சக்கர நாற்காலி இருக்க வேண்டும். நீர்வள ஆதாரத்துறையின் மூலம் செயற்பொறியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் வெள்ளப்பாதிப்பு குறைவாக, மிதமாக மற்றும் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளுக்கு மணல் மூட்டைகள் மற்றும் நீர் இறைக்கு இயந்திரம் எடுத்துச் செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பாலங்கள் தூர்வாரும் பணியினை துரிதமாக செய்து முடிக்க வேண்டும். Bulldozers, Earth moving equipment's and Power Saws தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலையின் ஓரத்தில் தேங்கும் மழைநீரை அருகிலுள்ள நீர்நிலைக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் மூலம் தேடுதல் மற்றும் மீட்புக்கருவிகள் செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் Mock Exercise- மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடத்த வேண்டும். தீயணைப்பு துறையின் சார்பில் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் அவசர கால செயல்பாடு குறித்த ((Mock drill) மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடத்த வேண்டும்.

போக்குவரத்து துறையின் மூலம் தனியார் பேருந்துகள் லாரிகள் விபரங்களை சேகரம் செய்து வைக்க வேண்டும். ஓட்டுநர்/நடத்துனர்களை அவசர காலங்களில் பணிபுரிய தயார் நிலையில் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் போக்குவரத்து பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதையினை பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பருவ மழைகாலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று தேவைப்படும் நேரங்களில் முக்கியமான இடங்களில் மின்சார இடையூறுகளை பழுத பார்க்க 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் மழைகாலங்களில் மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் தேவையானவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மருத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும். அவசர காலத்தில் தேவையான மருந்துகளின் விபரப் பட்டியல் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் செயல்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அவசர காலத்தில் மருத்துவ அதிகாரிகள் மருத்துவ பணியாளர்களை குழுவாக அமைத்து பணிகளை மேம்படுத்த வேண்டும்.

வெள்ளநீர் தேங்கும் இடத்தில் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் குடோனில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். மலைப்பகுதியில் 2-3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், ரேஷன் பொருட்களை பாதுகாப்பான பகுதிகளில் சேகரித்து வைக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையின் மூலம் மாவட்டகல்வி அலுவலர் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளப்பெருக்கு காலங்களில் அப்பகுதியல் உள்ள பள்ளிகள் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்க பயன்படுத்தப்படும் பள்ளி மாணவ/மாணவியர்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். கால்நடைப்பராமரிப்புத்துறையின் மூலம் தேவையான அளவு மருந்துப் பொருட்கள் மற்றும் கால்நடை தீவணங்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். முதல் நிலை மிட்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். பேரிடர் காலங்களில் தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பால்பவுடர் தேவையான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வேளாண்மைத்துறையின் மூலம் விதைகள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். தினசரி சேதார விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். குடிசைமாற்று வாரியம் மூலம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகங்கள் மற்றும் கட்டடங்களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் வெள்ளம் செல்ல கூடிய பகுதிகளில் நீர் தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். ஏரி,குளம் நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நீக்கப்பட வேண்டும். குடிநீரில் சரியான அளவில் குளோரின் சேர்த்து வழங்க வேண்டும்.பொதுப்பணித்துறையின் மூலம் நீர்தேக்கி வைப்பதற்கான தடுப்பணைகள் பழுது ஏற்பட்டு இருப்பின் அதன் பழுதுகளை சரி செய்ய வேண்டும். அணைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டு கரைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் அணைகள் மற்றும் ஏரிகளின் கதவுகள், மதகுகள் ஆகியன சரிவர இயங்குவதை சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் உறுதி செய்வதோடு அவைகளை உடனடியாக சரிசெய்து அறிக்கை அனுப்ப வேண்டும். மதகுகளையும், குறுக்கணைகளையும் சரி செய்ய வேண்டும். அரசு பள்ளி, கல்லூரி, தனியார் பள்ளி, கல்லூரி கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டடங்கள் உறுதித்தன்மையினை தணிக்கை செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் கவனம் செலுத்தி, செயல்படாத ஆழ்துளை கிணறுகள், வறண்ட ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றினை நிலத்தடி நீர் சேமிப்பு ஆழ்துளை கிணறுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருவமழை காலங்களில் பவானி மற்றும் கொடுமுடி வட்டங்களில் காவேரி மற்றும் பவானி அற்றங்கரைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்களுக்கு நிரந்தரத் தீர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட அளவில், வட்ட அளவில் குழு அமைத்து கணக்கெடுப்பு (நில அளவைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிஎன்ஸ்மாட் செயலியை தங்களது அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலர்கள், நில வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பிற துறைகளைச் சார்நத களப்பணியாளர்கள் மூலம் அனைத்து பொது மக்களுக்கும் இச்செயலி குறித்து தெரியப்படுத்தி பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும். எனவே ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில், அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ் (பொது), வருவாய் கோட்டாட்சியர்கள் சதிஷ்குமார் (ஈரோடு), திவ்யபிரியதர்ஷினி (கோபிசெட்டிபாளையம்), வட்டாட்சியர் அங்கமுத்து (பேரிடர் மேலாண்மை), அனைத்து வட்டாட்சியர்கள், காவல்துறை, தீயணைப்பு துறை, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Sep 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு