ஈரோடு: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் வழிபட தடை

ஈரோடு: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் வழிபட தடை
X

பவானி சங்கமேஸ்வரர் கோவில் (பைல் படம்)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3 நாட்கள் கோவில்களில் வழிபட தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

ஈரோட்டில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில், சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளி அம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர், பவானி சங்கமேஸ்வரர், செல்லாண்டி அம்மன், ஈரோட்டில் பெரிய மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன், கோட்டை பெருமாள் உள்பட கோவில்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது நவராத்திரி தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture