ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்
ஈரோடு ஜவுளி கடைகளில் அலைமோதும் கூட்டம்
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் புகழ்பெற்ற ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்து செல்வார்கள்.
வெளி இடங்களைக் காட்டிலும் இங்கு ஜவுளி ரகங்கள் குறைவான விலையில் கிடைப்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். மொத்தம் 740 கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது இந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகின்றன. இதனால் தற்போது இந்தப் பகுதியில் 240 கடைகளும் சாலையைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட கடை செயல்பட்டு வருகின்றன.
கொரோனா தளர்வுக்கு பிறகு தற்போது ஜவுளி வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் ஜவுளி வியாபாரம் களை கட்டியுள்ளது.இதனால் மொத்த, சில்லரை வியாபாரமும் அதிகளவில் நடந்து வருகிறது.ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. திருப்பூர் பனியன் காட்டன் கவுன், சுடிதார் மசகலி சுடிதார், வேட்டி ரகங்கள், பெண்களுக்கான சேலை வகைகள், துண்டு போன்றவை அதிக அளவில் விற்பனை ஆனது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu