ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில்  தடுப்பூசி முகாம்
X

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு.

ஈரோடு மாவட்டத்திலும் நாளை(சனிக்கிழமை) 21-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 496 மையங்களில், நாளை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

நாளை மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1988 பணியாளர்கள், 66 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 60 வயது உடைய இணை நோயுடைய முதியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

Tags

Next Story
how to bring ai in agriculture