2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது

2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது
ஈரோட்டில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி காய்கறி வியாபாரிகளிடமிருந்து 2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட 11 பேர் ரூ 2 கோடி வரை பணம் பெற்றுக் கொண்டு, இதுவரை வீட்டுமனை மற்றும் பணம் திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்ததாக ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து 11 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் ஏற்கனவே வைரவேல் சங்க தலைவர் மகன் வினோத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று சங்க துணை செயலாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu