/* */

ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது

ஈரோடு வ. உ. சி. பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

HIGHLIGHTS

ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது
X

பைல் படம்.

ஈரோடு வ. உ. சி. பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டம் தாளவாடியிலிருந்து தக்காளி அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பெட்டி தக்காளிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. குறைந்த அளவில் தக்காளி கொண்டு வரப்பட்டதால் விலை அதிகரித்து காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.2,500 வரை விற்பனையானது. இதேபோல் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.1200 வரை விற்பனையானது. இந்நிலையில் இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இன்று 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரத்தானது. இதன் காரணமாக இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென குறைந்தது. 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.1000 முதல் 1050 வரையும், 14 கிலோ பெட்டி ரூ.650 முதல் ரூ.700 வரையும் விற்பனையானது.இதனால் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையாகி வருகிறது. நேற்றை விட இன்று கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை தக்காளி விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Updated On: 25 Nov 2021 8:30 AM GMT

Related News