ஈரோட்டில் ஓய்வூதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
ஈரோட்டில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்.
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, அரசுப் பணியில் இருக்கும்போது ஓய்வு பெறும் நாளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தற்காலிக பணிநீக்கம் செய்யக் கூடாது என்பதை அனைத்துத் துறை ஓய்வூதியர்களுகும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சார்பில், ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஓய்வூதியர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோட்டக் தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும், ஓய்வூதியம் குறை தீர்ப்பு கூட்டத்தை மாவட்ட, மாநில அளவில் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தி நிலுவையில் உள்ளவைகள் மீது தீர்வு காண வேண்டும், ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், 1.4.2003-க்கு பின்னர் பதவி உயர்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல்படுத்தி காப்பீடு அட்டை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பன்னீர்செல்வம், பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu