/* */

பொது வேலை நிறுத்தம்:ஈரோடு மாவட்டத்தில் முழு வெற்றி பெறச் செய்ய தொழில்சங்கங்கள் முடிவு

ஒன்றிய அரசைக் கண்டித்து மார்ச் 28, 29 - ல் அகில இந்திய பொது வேலை நிறுத்தம்-மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்

HIGHLIGHTS

பொது வேலை நிறுத்தம்:ஈரோடு மாவட்டத்தில் முழு வெற்றி பெறச் செய்ய தொழில்சங்கங்கள் முடிவு
X

ஈரோட்டில் நடந்த அனைத்து தொழில்சங்க ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து மார்ச் 28, 29 - ல் அகில இந்திய பொது வேலை நிறுத்தம்-மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஈரோடு மாவட்டத்தில் முழு வெற்றி பெறச் செய்ய அனைத்து தொழில் சங்க கூட்டத்தில் முடிவு

ஈரோடு மாவட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் எல்பிஎப் மாவட்ட பொருளாளர்.செ.தங்கமுத்து தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஏஐடியுசி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் டி.ஏ.செல்வம், மாவட்டச் செயலாளர் எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.எம்.ஜெயபாரதி, சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர்எஸ்.சுப்ரமணியன், எல்பிஎப் சார்பில் மாவட்டச் செயலாளர் சே.கோபால், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ரவிச்சந்திரன், ஐஎன்டியுசி சார்பில் மாவட்ட துணைத் தலைவர்என்.சுப்பிரமணி, எஸ்.சுரேஷ்குமார், ஜே.சக்திவேல், என்.துரைசாமி, எச்எம்எஸ் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.மனோகரன், எல்டியுசி சார்பில் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சி.எம்.மணி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எம்எல்எப் மற்றும் டிடிஎஸ்எப் சங்கங்கள் சார்பில் வர இயலாத நிலையில் கூட்ட முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தனர்.

மார்ச் 28,29 - பொது வேலைநிறுத்தம் தொடர்பான அனைத்து சங்க தேசிய, மாநில முடிவுகளை ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி விளக்கிப் பேசினார். அவற்றை ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்துவது பற்றி விவாதித்து பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

1) வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்காத சங்கங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு கொடுப்பது.

2)மார்ச் 22-ல் ஈரோடு, கோபியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுக்கா தோழர்கள் ஈரோட்டில் பங்கேற்பது.தலைமை/பொறுப்பு: ஏஐடியுசி இடம்: ஈரோடு GH அருகில் அல்லது சூரம்பட்டி நால்ரோடு அருகில்,கோபி, நம்பியூர், சத்தி தாளவாடி, பவானி, அந்தியூர் தாலுக்கா தோழர்கள் கோபியில் பங்கேற்பதுதலைமை/பொறுப்பு: சிஐடியு இடம்: கோபி பஸ் நிலையம்

3) ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி ஆகிய ஐந்து மையங்களில் மார்ச் 28-ல் மறியல் போராட்டம், மார்ச் 29-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது.ஈரோட்டில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுக்காக்கள் பங்கேற்பது.பொறுப்பு/தலைமை: எல்பிஎப்.பெருந்துறையில் பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்கள் பங்கேற்பது.பொறுப்பு/தலைமை: ஐஎன்டியுசி

பவானியில் பவானி அந்தியூர் தாலுக்காக்கள் பங்கேற்பது.பொறுப்பு/தலைமை: ஏஐடியுசி.கோபியில் கோபி, நம்பியூர் தாலுக்காக்கள் பங்கேற்பது.பொறுப்பு/தலைமை: எச்எம்எஸ்.சத்தியில் சத்தி, தாளவாடி தாலுக்காக்கள் பங்கேற்பது பொறுப்பு/தலைமை: சிஐடியு.அனைத்து சங்கங்கள் சார்பில் 5000 நோட்டீஸ், 500 வால் போஸ்டர், பிளக்ஸ்பேனர் அச்சிடுவது செலவுகளை பகிர்ந்து கொள்வது.

4) அனைத்து விவசாய சங்கங்களையும் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பது.

5) பிரசார இயக்கம்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 60 வயதான அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், வருங்கால வைப்புநிதி திட்ட குறைந்த பட்ச ஓய்வூதியத்தை மாதம் ஆறாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் மீதான கலால் வரியைக் குறைத்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மின்சாரத் திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும் என்பதுள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை விளக்கி மாவட்டம் முழுவதும் விரிவான முறையில் பிரச்சாரம் மேற்கொள்வது.சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் செய்வது. நிறைவாக, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் நன்றியுரை ஆற்றினார்.



Updated On: 16 March 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  5. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  7. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  9. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  10. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...