ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல்

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்கள் அதிரடியாக பறிமுதல்
X

ஈரோடு பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார். 

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் 2 பேரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறினால் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி அபாரதம் விதித்து வருகின்றனர். ஈரோட்டில் இன்று முதல் இரு சக்கர வாகனத்தில் ஒட்டுபவர், அமர்ந்திருப்பவர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு வாகனங்கள் பறிமுதல் செய்யபடுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!