ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
X
ஈரோடு நகரில் உற்சாகமாக பள்ளிக்கு சென்ற மாணவிகள்.

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை விடப் பட்டது. விடுமுறையை கொண்டாடுவதற்காக மாணவ மாணவிகள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். அந்த வகையில் மஞ்சள் நகரமான ஈரோட்டில் இருந்தும் விடுதியில் தங்கி படித்த ஏராளமான மாணவ மாணவிகள் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியதால் மாணவ மாணவிகள் ஈரோட்டிற்கு திரும்பி தங்களது பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் சென்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதல் ஈரோடு பஸ் மற்றும் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் வந்தனர். இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலையம் ரயில் நிலையங்களில் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என கூட்டம் நிரம்பி வழிந்தது.

அதே நேரம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வரும் 9-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் இன்றுஅவர்கள் படிக்கும் பள்ளியிலேயே வழங்கப்பட்டது. இன்று காலை ஈரோடு மாநகர பகுதியில் மீனாட்சி சுந்தரனார் சாலை மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

Updated On: 3 Oct 2023 4:00 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு அனுப்பப்பட்ட ரூ.25 லட்சம்...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    Rajju Porutham Meaning திருமணப் பொருத்தத்தில் முக்கிய பங்கு...
  4. சேலம்
    சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர்...
  5. தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு: ஒன்றுக்கு ரூ.4.90 ஆக...
  7. திருமங்கலம்
    மதுரையில் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
  9. சேலம்
    சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
  10. சினிமா
    பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!