ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு அடுத்த பரிசு அரிசி மூட்டையா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 77 பேர் தேர்தல் களத்தில் உள்ளதால் பிரசாரம் அனல் பறந்து வருகிறது.
இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒருபுறம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மறுபுறம் பட்டுவாடா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முன்னதாகவே வெள்ளி கொலுசு, ஸ்மார்ட்வாட்ச், பணம் உள்ளிட்டவை பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்த நிலையில், தற்போது வாக்காளர்களுக்கு அரசயில் கட்சியினர் வீடு வீடாக சென்று அரசி மூட்டைகள் வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu