கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள்: ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள்: ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
X

ஈரோட்டில் கணித மேதை ராமானுஜன் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கணித மேதை ராமானுஜனின் 135-வது பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணித்து மரியாதை செலுத்தினர்

கணித மேதை ராமானுஜனின் 135-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் தேசிய கணித தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராமானுஜன் பிறந்த நாளையொட்டி, அவரது பிறந்த இடமான ஈரோடு தெப்பக்குளம் வீதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மண்டல தலைவர் ஆர். விஜயபாஸ்கர் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் டி.திருச்செல்வம் முன்னிலையில், மாவட்ட துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, ராமானுஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜவஹர் அலி, மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ்.செல்வம், பொதுச் செயலாளர்கள் கராத்தே யூசுப், இரா. கனகராஜன், ஈரோடு மாநகர் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், மாநகர் மாவட்ட சிறுபான்மைத் துறை துணைத் தலைவர் கேஎன் பாஷா, நெசவாளர் அணி தலைவர் சி மாரிமுத்து, கே.ஜே. டிட்டோ ஆகியோர் கலந்து கொண்டு, ராமானுஜரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!